எல்ல பகுதியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
இலங்கையில் டிசம்பர் மாதத்தின் முதல் 4 நாட்களில் 23,958 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதில் எல்ல (Ella) பகுதிக்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் பூங்கா, ராவணஎல்ல நீர்வீழ்ச்சி, நட்சத்திர ஹோட்டல்கள் என்பவற்றுக்கு அதிகம் செல்வதாகவும் இதனால் எல்லவில் வாடகை வாகன ஓட்டுநர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், வர்த்தகர்கள், வணிகர்கள் ஆகியோருக்கு அதிக வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது.
நாட்டில் பல்வேறு பாகங்கள்
குறிப்பாக ரஷ்யாவில் இருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தில் ரஷ்யாவில் இருந்து 4,418 பேரும், இந்தியாவில் இருந்து 4,317 பேரும், பிரித்தானியாவில் இருந்து 1,592 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அந்த வகையில் நாட்டில் பல்வேறு பாகங்களிலிருந்து எல்ல பகுதிக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |