சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் திடீர் வீழ்ச்சி! சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்
இந்த ஆண்டின் செப்டெம்பர் வரையில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விடவும் குறைவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் நவம்பர் முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை இலங்கைக்கு ஐரோப்பிய நாடுகளின் பயணிகள் வருகை தரும் காலகட்டமாகும்.

குறிப்பாக ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு ஆயத்தமாகியுள்ளனர்.
ஆண்டுக்கான மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை
இந்த ஆண்டு செப்டெம்பர் இறுதி வரை ஆண்டுக்கான மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையானது சுமார் 526,000 ஆக பதிவாகியுள்ளது.
அதன் மூலமாக 829 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது. எனினும் எதிர்பார்த்த எண்ணிக்கையை விடவும் குறைவான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர்.

செப்டெம்பர் மாதம் வரையில், சுமார் 1.8 பில்லியன் டொலர் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்த்த போதும், அடுத்த மூன்று மாதங்களில் மேலும் 300,000 சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 13 மணி நேரம் முன்
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam