இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகுவதாக அறிவிப்பு
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜயசிங்க நேற்றுடன் அந்த நிறுவனத்தில் தனது கடமையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
சுற்றுலாத் துறை பங்குதாரர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தமது பதவியின் கடைசி நாள் அக்டோபர் 5 என்று விஜயசிங்க தெரிவித்துள்ளார்.
"கடந்த இரண்டரை ஆண்டுகளில் நாங்கள் கொந்தளிப்பான காலங்களை கடந்துவிட்டோம், பிழைத்துள்ளோம். சவால்கள் எங்களை ஒன்றிணைத்தது, ”என்று அவர் கூறினார்.
தகவல்களின்படி, விஜயசிங்க வேறு ஒரு அமைச்சின் கீழ் புதிய பொறுப்பை ஏற்க இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நேர்மையான அரசு ஊழியரை இழந்துவிட்டது
இதற்கிடையில், அதிகார சபையின் முன்னாள் தலைவர் கிமர்லி பெர்னாண்டோ, தமது சமூக ஊடகப் பதிவு ஒன்றில், சுற்றுலாத் துறை, திறமையான மற்றும் நேர்மையான அரசு ஊழியரை இழந்துவிட்டது.
இலங்கை சுற்றுலாத்துறைக்கு இருண்ட நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த பதவி விலகல், தொடர்பில் அரசியல் அழுத்தங்கள் குறித்து தகவல்கள்
கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

திருப்பி அடிக்கும் இந்தியா., பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் News Lankasri
