திருகோணமலையில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட வேலைத்திட்டம்
திருகோணமலை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா பிரதேசமாகவும் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்ற பிரதேசமாக காணப்படுகின்ற குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட இறக்கக்கண்டி களப்பு பகுதிகளில் படகு இறங்கு துறை அமைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு
குறி்த்த மற்றும் அதனை அண்டியுள்ள இயற்கை பகுதிகளினை அபிவிருத்தி செய்யும் நோக்குடனும் உள்ளூர் படகு சேவைகளை அதிகரித்து உள்ளூர் பொருளாதாரத்தை அதிகரிக்கும் நோக்குடனும் இந்த திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் நிதி ஒதுக்கீட்டில், இந்த திட்டத்தின் படி களப்பு பகுதியில் படகு இறங்கு துறை அமைக்கும் செயற்பாடு தொடர்பாக செயலாளர் தலைமையில் குறித்த பகுதி பார்வையிடப்பட்டது.
அத்துடன் களப்பு பகுதியில் இறங்கு துறை அமைத்து உள்ளூர் படகு சேவைகளை அதிகரித்து உள்ளூர் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்காக கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் ஊடாக 5.3 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.







பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
