திருகோணமலை மூதூர் அந்தோனியார் மகா வித்தியாலயத்தின் 160ஆவது ஆண்டு நிறைவு- நடைபவணி பேரணி
திருகோணமலை(Trincomalee) மாவட்டத்தில் உள்ள பழமையான பாடசாலைகளில் ஒன்றான மூதூர் அந்தோனியார் மகா வித்தியாலயத்தின் 160ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவணி பேரணி இன்று(10) காலை இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் அருட்பணி கொன்பியுசியஸ் அடிகளார் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
நடைபவணி பேரணி
மூதூர் அந்தோனியார் மகா வித்தியாலய பாடசாலை நிர்வாகம்,பாடசாலையின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டிலும் இந்த நடைபவணி இடம்பெற்றது.
நடைபவணி ஆரம்பமாவதுக்கு முன்னர் பாடசாலையின் 160ஆவது நினைவு வரவேற்பு வாயில் நிகழ்வின் முதன்மை அதிதியாக கலந்து கொண்ட திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேலால் திறந்து வைக்கப்பட்டது.
இதன் பின்னர் பாடசாலை நுழைவாயிலிருந்து நடைபவணி ஆரம்பமாகி மூதூர் பிரதான வீதியூடாக பயணித்து மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.
மூதூர் அந்தோனியார் மகா வித்தியாலய பாடசாலை
இவ் நடைபவணி நிகழ்வில் பாடசாலையின் மாணவர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் பாடசாலை கொடிகளை ஏந்தியிருந்தனர்.
அத்தோடு பாடசாலையை பிரதிபலிக்கும் வகையில் பெனர்கள்,நினைவுச் சின்னங்களை ஏந்தியவாறு நடனங்கள் ஆடி நடைபவணியில் ஈடுபட்டனர்.



















யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam
