டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்ற சுற்றுலா கப்பல் மாயம் - செய்திகளின் தொகுப்பு
அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களைக் காணச் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று காணாமல் போயுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி நள்ளிரவில் 2200 பேருடன் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த டைட்டானிக் எனும் சொகுசு கப்பல் அட்லாண்டிக் கடலில் பனிமலையில் மோதி விபத்துக்குள்ளானது.
வரலாற்றில் இடம்பிடித்த டைட்டானிக் கப்பல் விபத்தில் 1600 பேர் பலியாகினர்.
கடந்த 1985ஆம் ஆண்டு வடக்கு அட்லாண்டிக் பகுதியிலிருந்து 400 மைல் தென்கிழக்கே நியூபவுன்ட்லாண்ட் தீவு அருகே கடலுக்கு அடியில் 4 கி.மீ ஆழத்தில் சிதைந்து போயிருந்த கப்பலின் முன்பாகம் கண்டறியப்பட்டது.
இது தொடர்பிலான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
