திருகோணமலையில் மான்களை பாதுகாக்க விசேட செயற்திட்டம்(Photos)
திருகோணமலை நகரில் உள்ள மான்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் செயற்பாடு இன்று (25.06.2023) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம் மற்றும் திருகோணமலை நகரசபையின் அனுசரணையுடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
திருகோணமலை நகர சபையும் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் மான்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் செயற்திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்துள்ளார்.
பிளாஸ்டிக் கழிவு
இந்த செயற்றிட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளர், திருகோணமலை நகர சபை செயலாளர், திருகோணமலை பிரதேச செயலாளர், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த காலங்களில் திருகோணமலையில் 20-க்கும் மேற்பட்ட மான்கள்
பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு உயிரிழந்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில்
தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மான்களின் பாதுகாப்பு, உணவு போன்ற விடயங்களைக் கவனிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் அதிகமான மான்களைக் கொண்ட இடமாக திருகோணமலை திகழும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்துக்கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |



வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
