இந்திய அதானி நிறுவனத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்
மன்னாரின் (Mannar) தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கும் நோக்கில் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளது.
இந்தியாவின் (India) அதானி கிரீன் எனர்ஜி (Adani Green Energy) தனியார் நிறுவனத்திற்கு மன்னாரில் காற்றாலை மின் திட்டத்தை வழங்குவதற்கான அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிராகவே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மன்னாரில் 250 மெகாவாட் மற்றும் பூநகரியில் 234 மெகாவாட் என்ற அளவில் இரண்டு காற்றாலைகள அமைப்பதற்கான திட்டத்திற்காக குறித்த நிறுவனம், 442 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளது.
காற்றாலை வேலைத்திட்டம்
இதற்கமைய, வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம், இந்தத் திட்டத்தினால் தனித்துவமான பல்லுயிர்கள் மற்றும் மன்னாரில் உள்ள அழகிய நிலப்பரப்புகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளது.
அத்துடன், மன்னார், மத்திய ஆசியாவின் புலம்பெயரும் உயிரினங்களால் பறக்கும்பாதையின் தெற்குப் புள்ளியாக காணப்படுகின்றது.
அதேநேரத்தில், பல உள்நாட்டு நீர் பறவைகள் மற்றும் வெளவால் இனங்களும் உள்ளன.
இந்த நிலையிலேயே, தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் சர்வதேச மரபுகள் இரண்டையும் மீறி, அதானி நிறுவனத்தின் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
எனவே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் அவசியத்தை உணர்ந்து, சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் வகையில் இதுபோன்ற திட்டங்களை செயற்படுத்தப்பட வேண்டாம் என்று வனவிலங்கு, இயற்கை பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |