கிளிநொச்சியில் இராணுவத்தினரால் நிர்மானிக்கப்படும் பூங்காவிற்கு எதிராக போராட்டம்
கிளிநொச்சியில் (Kilinochchi) இராணுவத்தினரால் நிர்மானிக்கப்படும் பூங்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது, இன்று (18.05.2024) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் (Kanakaratnam Sukash) தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, கிளிநொச்சி - டிப்போ சந்தியில் உள்ள யுத்த வெற்றி நினைவுச்சின்னம் காணப்படும் பகுதியில் இராணுவத்தினரால் சிறுவர் பூங்கா அமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்த வெற்றி நினைவுச்சின்னம்
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் போராட்டத்தினை அமைதிப்படுத்த முனைந்துள்ளனர்.
இருப்பினும், அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதன்பின்னர், வீதி போக்குவரத்துக்கு இடமளித்து போராட்டத்தில் ஈடுபடுமாறு பொலிஸாரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த பகுதியை சுற்றியவாறும் பிரதான வாயிலை மறித்து அமர்ந்தவாறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
You mayl ike this













விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam
