தமிழ் மக்களுக்கு நிகழும் சித்திரவதைகள்: கே.எஸ்.ரட்ணவேல்

Sri Lanka Army Sri Lanka Police Sri Lanka Refugees Sri Lanka Politician Sri Lanka
1 மாதம் முன்

அவசர கால சட்டத்தின் மூலம் சிலரை கைது செய்யலாம் எனவும் ஆனால் சித்திரவதை செய்யப்பட முடியாது என தெட்டத்தெளிவாக சட்டங்கள் கூறுகின்றன. ஆனால் இந்த சட்டங்கள் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பலனும் அளிப்பதில்லை என சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்துள்ளார்.

எமது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  

தமிழ் மக்கள் அவலம்

“தமிழ் மக்கள் சித்திரவதைப்படுத்தப்படுவது என்பது இன்று, நேற்றல்ல நெடுங்காலமாகவே இது நடந்திருக்கின்றன. எப்பொழுதெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கின்றதோ அப்பொழுதெல்லாம் தமிழ் மக்கள் கொடூரமாக சித்திரவதை படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

தமிழ் மக்களுக்கு நிகழும் சித்திரவதைகள்: கே.எஸ்.ரட்ணவேல் | Torture Of The Tamil People

சுதந்திரம் கிடைத்த காலத்தில் இருந்தே தமிழ் மக்களை வேற்றாராக பார்க்கின்ற சுபாவம் சிங்கள ஆதிக்கம் பொலிஸாரிடமும், இராணுவத்திடமும் இருந்திருக்கின்றது.

பன்நெடுங்காலமாக அதாவது யுத்தம் இல்லாது, சமாதானம் இருந்த காலத்திலேயே 1950, 1960 களில் வடக்கிற்கும் தெற்கிற்குமாக இருந்த ஆனையிறவு நிலப்பரப்பில் சோதனைச்சாவடி அமைத்து கடத்தல்களை தடுப்பதென்ற போர்வையில் வருகின்ற தமிழ் மக்களை மறித்து பலவிதமாக துன்புறுத்தல் நடந்திருக்கின்றது.

எண்ணிக்கையில் அடங்காத  இளைஞர்கள் மட்டுமல்ல வயதானவர்கள் கூட பொலிஸாரால், இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு தமிழ் மக்கள் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அவர்கள் சிறையில் வைக்கப்பட முன்னர் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளன.

இதனை பெறுவதற்காகவே சித்திரவதைக்குட்படுத்தப்பட்டார்கள். சில வழக்குகள் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் பல வழக்குகளில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அனுமதிக்கப்பட்டு தண்டனை பெற்ற சம்பவங்களும் இருந்திருக்கின்றது.

ஆனால் சட்டத்திற்கும் , நியாயத்திற்கும் உட்படாமல் சித்திரவதைகள் நடந்திருக்கின்றன. இது ஆதார பூர்வமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கைது செய்யப்பட்டாலே ஒருவர் சித்திரவதைக்குட்படுத்தப்படுவர் என்பது நிச்சயம்.

தமிழ் பெண்கள் பாலியல் ரீதியான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறான அதிக சம்பவங்கள் வெளியே வருவதில்லை.

தமிழ் மக்களுக்கு நிகழும் சித்திரவதைகள்: கே.எஸ்.ரட்ணவேல் | Torture Of The Tamil People

நானே கையாண்ட ஒரு வழக்கு 1996, 1997 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மன்னாருக்கு இடம்பெயர்ந்து வந்திருந்த இரண்டு யுவதிகளை பள்ளிமுனை பொலிஸ் நிலையத்தில் வைத்தே பொலிஸாரும், கடற்படையினரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வன்புனர்விற்கு உட்படுத்தியிருந்தனர்.

இந்த தகவல் நிருபராலும், அப்போதைய பேராயராக இருந்த இராஜப்பு ஜோசப் அவர்களாலும் வெளிக்கொண்டு வரப்பட்டது. இதற்காக அவர்களை சித்திரவதை செய்தது மட்டுமல்லாமல் தற்கொலை குண்டுதாரிகளாக சித்தரித்து நீதிமன்றிலே பாரப்படுத்தி விளக்கமறியலில் இட்டார்கள்.

பிறகு அந்த நீதிமன்றிலே துன்புறுத்தியவர்களை அடையாளம் காணப்பட்டு அவர்கள் குற்றவாளிகளாக மன்னார் நீதிமன்றிலே அடையாளம் காணப்பட்டார்கள்.

சமீபகாலத்தில் வடக்கு கிழக்கில் பல இடங்களில் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என கூறி கைது செய்யப்பட்டு அவர்கள் கொடூரமான முறையில் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இரணைமடு முகாம் அது ஒரு சித்திரவதை முகாம் தான். தற்சமயத்தில் கூட அங்கே சித்திரவதைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இவைகள் வழக்குகள் மூலம் சில விடயங்களை வெளிக்கொண்டு வந்திருக்கின்றோம்.

எனவே சித்திரவதை இங்கே ஒன்றும் புதிதல்ல. பாரிய அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. யார் அதனை விசாரிப்பது? அதாவது இராணுவத்தினரும், பொலிஸாரும் செய்த விடயங்களை விசாரிக்க கூறுவது அவர்களையே, அதாவது குற்றம் செய்தவர்களையே விசாரணை செய்ய நியமிக்கப்படுவார்கள். அது எவ்வாறு முடியும் என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும்.

சித்திரவதை என்பது உலக அளவில் தடை செய்யப்பட்ட ஒரு விடயம். எந்த சந்தர்ப்பத்திலும் சித்திரவதை செய்யப்படாமல் இருப்பது எங்களுடைய அடிப்படை உரிமை என்று அரசியல் சாசனத்தில் கூறப்பட்டிருக்கிறது.

அவசர கால சட்டத்தை பிரகடனப்படுத்திய காலத்திலும் சிலரை கைது செய்யலாம் ஆனால் சித்திரவதை செய்யப்பட்ட முடியாது என தெட்டத்தெளிவாக சட்டங்கள் கூறுகின்றன.

ஆனால் இந்த சட்டங்கள் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பலனும் அளிப்பதில்லை. பொலிஸாரும், இராணுவத்தினரும், அரசியல் வாதிகளும் இதை பற்றி சிந்திப்பதில்லை.

தமிழ் மக்கள் என்றாலே அவர்களை அதிகார பூர்வமாக சித்திரவதைப்படுத்தக்கூடியவர்கள். அது வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் அத்துடன் மலையகத்திலுள்ளவர்களுக்கும் அது பொருந்தும்.

தனி சட்டம்

இவை அனைத்தையும் பார்க்கும் போது இலங்கை நாடு என்பது சட்டம் சரிசமமாக, நியாயமாக பிரயோகிக்கபடுவதில்லை. தமிழ் மக்களுக்கு ஒரு சட்டம் சிங்கள மக்களுக்கு என்று ஒரு சட்டம் என்றே இங்கு காணப்படுகின்றது.

சித்திரவதையின் சரித்திரம் இதுதான். இன்று நேற்றல்ல பல்லாண்டு காலமாக சிங்களவர்கள் சிங்கள மக்கள் , தமிழ் மக்கள் மீதுள்ள காழ்ப்புணர்வு தான் இந்த சித்திரவதையை மேற்கொள்ள தூண்டியிருக்கின்றது. இதற்கு சட்டமோ, நீதிமன்றங்களோ தமிழ் மக்களுக்கு இல்லை என்பது தான் வெளிப்படையாக தெரிகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

13 Aug, 2022
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada, Markham, Canada

11 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், சண்டிலிப்பாய்

19 Jul, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Brampton, Canada

17 Aug, 2019
மரண அறிவித்தல்

பன்னாலை, Bishop's Stortford, United Kingdom

15 Aug, 2022
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, London, United Kingdom

27 Jul, 2022
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, மயிலிட்டி தெற்கு, கட்டுவன், பரிஸ், France, Fredericia, Denmark, Orpington, United Kingdom

07 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, கரம்பொன், கொழும்பு, சிட்னி, Australia

14 Aug, 2022
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், மெல்போன், Australia

12 Aug, 2022
நன்றி நவிலல்

சுழிபுரம், தெல்லிப்பழை, பரிஸ், France

19 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Florida, United States

18 Jul, 2022
மரண அறிவித்தல்

நாரகென்பிட்டி, சங்கானை, யாழ்ப்பாணம்

16 Aug, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Sens, France

29 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Düren, Germany

29 Aug, 2021
மரண அறிவித்தல்

முள்ளானை இளவாலை, Scarborough, Canada

15 Aug, 2022
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

கோண்டாவில் மேற்கு, London, United Kingdom

19 Jul, 2022
மரண அறிவித்தல்

சுன்னாகம், Kirchheim Unter Teck, Germany, Toronto, Canada

13 Aug, 2022
மரண அறிவித்தல்

திருகோணமலை, Toronto, Canada

15 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ் அராலி கிழக்கு, Jaffna, சம்பியா, Zambia, Toronto, Canada

14 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா

16 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Brampton, Canada

19 Aug, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், செங்காளன், Switzerland

16 Aug, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, Toronto, Canada

16 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

15 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி வடக்கு, கல்வியங்காடு, பரிஸ், France

15 Aug, 2019
20ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, அச்சுவேலி, சூரிச், Switzerland

16 Aug, 2002
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, கோவில் புதுக்குளம்

13 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, London, United Kingdom

16 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், சுவிஸ், Switzerland

06 Aug, 2020
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Perth, Australia

12 Aug, 2022
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US