உலகிலேயே அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகள்: வெளியானது விபரம்
உலகிலேயே அதிக தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் 5 நாடுகள் குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
ஒரு நாட்டில் இருக்கும் தங்கம் கையிருப்பு அந்நாட்டின் பொருளாதார ஸ்த்திரத்தன்மையை சுட்டிக்காட்டும் வண்ணம் அமையும்.
அந்தவகையில் முதலாம் இடத்தில் அமேரிக்கா,
உலக அளவில் தங்கம் கையிருப்பில் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. உலகிலேயே 8,133 மெட்ரிக் டன் தங்கம் அமெரிக்காவிடம் உள்ளது.
இரண்டாவதாக ஜேர்மனி
தங்கம் கையிருப்பில் ஐரோப்பிய நாடான ஜேர்மனி இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜேர்மனியிடம் 3,355 மெட்ரிக் டன் தங்கம் கையிருப்பு உள்ளது.
இருப்பினும் பல நாடுகள் பொருளாதாரத்தில் ஜேர்மனியை விட முன்னணியில் உள்ளன.
மூன்றாவதாக இத்தாலி
உலகிலேயே அதிக தங்கம் கையிருப்பு உள்ள நாடுகளின் பட்டியலில் இத்தாலியின் பெயர் மூன்றாவது இடத்தில் உள்ளது. இத்தாலியில் 2,452 மெட்ரிக் டன் தங்கம் தங்கம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
நான்காவதாக பிரான்ஸ்
ஐரோப்பிய நாடான பிரான்ஸ், நான்காவது பாரிய தங்க இருப்பு நாடாகவும் பெயரிடப்பட்டுள்ளது. பிரான்சில் 2437 மெட்ரிக் டன் தங்கம் கையிருப்பு உள்ளது.
இறுதியாக ஐந்தாம் இடத்தில் ரஷ்யா
தங்க இருப்பு அடிப்படையில், ரஷ்யா ஐந்தாவது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் 2,330 மெட்ரிக் டன் தங்க இருப்பு உள்ளது.
இவ்வாறு மேற்குறிப்பிடப்பட்ட நாடுகளில் உலக பிரசித்திபெற்ற நாடான பிரித்தானியா உள்ளடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த தர வரிசையில் சீனா ஆறாம் இடத்திலும் சுவிஸர்லாந்து, இந்தியா, ஜப்பான் போன்றவை அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளது.