வடக்கு - கிழக்கில் நடந்த அடக்குமுறை! நாளை நாடு முடக்கப்படும்: ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை (Video)
நாடளாவிய ரீதியில் நாளை (15.03.2023) சகல தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று (14.03.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் மக்களின் தேவைகளை கணிக்காமல், அரசாங்கத்தின் இருப்பை பாதுகாக்க பல செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது.
அரசாங்க அடக்குமுறைகள்
எனவே மக்களுக்கு ஆதரவாக அதாவது எங்களது கோரிக்கைகளை முன்வைத்தே இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் அரசாங்க அடக்குமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் ஜனநாயக ஆட்சிக்காக நாளை (15.03.2023) நாடு முழுதும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில், நாடளாவிய ரீதியாக உள்ள அரச பாடசாலைகளில் ஆசிரியர்கள் நாளை ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
ஆசிரியர்களின் சம்பளத்தை உடனடியாக உயர்த்தி ஆசிரியர்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவு வழங்குமாறு கோரி இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட அதே அடக்குமுறை செயற்பாடு தற்போது இங்கும் நடைபெறுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது பின்வரும் காணொளி,

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
