ஹட்டனில் டோக்கன் முறையில் பெட்ரோல் விநியோகம்
ஹட்டன் நகரில் அமைந்துள்ள ஐ.ஓ.சி எண்ணெய் நிரப்பு நிலையத்திற்கு இன்று(11) காலை பெட்ரோல் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எரிபொருள் நிலையத்தில் வரிசையில் நின்றவர்களுக்கு ஹட்டன் பொலிஸார் பெட்ரோல் வாங்குவதற்கான டோக்கன்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையை எடுத்திருந்தனர்.
இதனை தொடர்ந்து மக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பெட்ரோல் விநியோகிக்கபபட்டுள்ளது.
டோக்கன் முறை
இதேநேரம் கடந்த 08 ஆம் திகதி ஹட்டன் பெட்ரோல் நிலையத்தில் மின் பிறப்பாக்கிகளுக்கும் வாகனங்களின் கொள்கலன்களுக்கும் பெட்ரோல் விநியோகிக்கபபட்டமையில் வரிசையில் நின்ற பல வாகனங்களுக்கு பெட்ரோல் பெற்றுக்கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாக பலர் தெரிவித்தனர்.
பெட்ரோல் விநியோகம்
இதனால் இன்றைய தினம் கொள்கலன்களுக்கோ,அல்லது மின் பிறப்பாக்கிகளுக்கோ பெட்ரோல் விநியோகிக்கபபடமாட்டாது என பொலிஸார் ஒலி பெருக்கிகள் மூலம் அறிவித்தனர்.
குறித்த பெட்ரோலினை முறையாக வழங்குவதற்காக இரானுவமும் பொலிஸாரும் இணைந்து
நடவடிக்கைகளை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.



