மன்னாரில் கிராம ரீதியான எரிபொருள் விநியோகம் முன்னெடுப்பு (Photos)
மன்னார் நகர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களுக்கு எரிபொருள் அட்டையின் ஊடாக எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது.
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் விநியோகம், இன்று காலை தொடக்கம் மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலகத்தின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பங்கீட்டு அடிப்படையில் விநியோகம்
அதன் அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களுக்கு 2000 ரூபாவிற்கும், முச்சக்கர வண்டிக்கு 2500 ரூபாவிற்கும், கார்களுக்கு 5000 ரூபாவிற்கும் பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றது.
மன்னார் சௌத்பார், பனங்கட்டுகொட்டு மேற்கு, பனங்கட்டுகொட்டு கிழக்கு, பள்ளிமுனை கிழக்கு, பள்ளிமுனை மேற்கு, உப்புக்குளம் வடக்கு, உப்புக்குளம் தெற்கு, பெரியகடை, பெற்றா, சாவற்கட்டு, சின்னக்கடை ஆகிய 11 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் இன்றைய தினம் வழங்கப்படாத கிராமங்களுக்கு அடுத்தகட்ட எரிபொருள் விநியோகத்தின் போது வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.










