கழிப்பறைக் கழிவுகளை டிக்கோயா ஆற்றில் கொட்டிய சந்தேகநபர்கள் கைது
மஸ்கெலியா பிரதேசசபைக்கு உரித்தான கழிவகற்றும் (Gully) பௌசரில் சேகரிக்கப்பட்ட கழிப்பறைக் கழிவுகளை, காசல்ரீ நீர்த்தேக்கத்தை நோக்கி வழிந்தோடும் டிக்கோயா ஆற்றில் கொட்டிய கூறப்படும் பௌசர் சாரதியும், உதவியாளரும் ஹட்டன் பொலிஸாரால் நேற்று (01.10.2026) சந்தேகத்தின் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் பகுதியில் வீடொன்றில் கழிப்பறையில் இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளை, ஹட்டன் - நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் அமைந்துள்ள தனியார் நீர்மின் நிலையத்திற்கு அருகில் உள்ள டிக்கோயா ஆற்றில் இவர்கள் கொட்டியுள்ளனர்.
உடனடியாக வழங்கப்பட்ட தகவல்

இதனைக்கண்ட பிரதேசவாசிகள், ஹட்டன் வலயத்தக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியாட்சகர் பிரதீப் வீரசேகரவிற்கு உடனடியாகத் தகவல் வழங்கியுள்ளனர்.
அதனடிப்படையில் விரைந்து செயற்பட்ட பொலிஸார், சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்து, கழிவகற்றும் பௌசரையும் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும், மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவரும் இன்று (02.10.2026) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
இவ்வாறு சேகரிக்கப்படும் கழிப்பறைக் கழிவுகளை, சந்தேகநபர்கள் நீண்டகாலமாக சூழலில் கொட்டி வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

