பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இருப்பினும், அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் மதிப்பு மாறாமல் உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 371.39 ரூபாவாகவும், கொள்வனவு விலை 360.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கியின் தகவலுக்கமைய, பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு இன்று குறைந்துள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 404.13 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 388.49 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 461.47 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 444.57 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 9 மணி நேரம் முன்
சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam