அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி : களமிறங்கவுள்ள குசல் பெரேரா
2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று(16.02.2026) நடைபெறவுள்ள போட்டிக்காக, கமில் மிஷாரவுக்குப் பதிலாக குசல் ஜனித் பெரேரா அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கமில் மிஷாரவின் மோசமான துடுப்பாட்டத் திறன் காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
4 ஆண்டுகளுக்குப் பின்னர்
இப்போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இருபதுக்கு 20 போட்டியொன்றில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் 4 ஆண்டுகளுக்குப் பின்னரே மீண்டும் நேருக்கு நேர் மோதிக்கொள்கின்றன.
இன்றைய போட்டியில் வெற்றி பெற முடிந்தால், இலங்கை அணியினால் சுப்பர் 8 சுற்றுக்கு இலகுவாகத் தகுதி பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உருவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமான விஷுவல்ஸ்.. சிவராத்திரி அன்று வெளிவந்த நாகபந்தம் படத்தின் மிரட்டலான டிரைலர்.. Cineulagam