இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்(Live)
நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் (06.06.2023) காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
காலை 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, காலை 10.30 முதல் மாலை 5 மணி வரை, சிவில் விமான சேவைச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்கு விதிகள், வணிகக் கப்பல் தொழில் சட்டத்தின் கீழ் 13 ஒழுங்கு விதிகள் மற்றும் கப்பல் தொழில் முகவர்களுக்கு கப்பல் சரக்கனுப்புநர்க்கு, கலன் செயற்படுத்தாப் பொதுக்காவுநர்க்கு மற்றும் கொள்கலன் செயற்படுத்துநர்க்கு உரிமமளித்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அதன்பின்னர், மாலை. 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |