நாடாளுமன்றில் இன்று வெளியாகவுள்ள அறிவிப்புகள்! பலப்படுத்தப்படும் பாதுகாப்பு
நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றில் முக்கிய சில அறிவிப்புகள் வெளியிடப்படவுள்ளன.
அதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் மற்றும் அந்த பதவி வெற்றிடமாக இருப்பதாக சபாநாயகர் அறிவிக்க உள்ளார்.
இதேவேளை 1981ஆம் ஆண்டு 2ஆம் இலக்க ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் 4ஆம் பிரிவின் பிரகாரம் சபாநாயகர் சகல உறுப்பினர்களையும் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.
இலங்கை மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
அத்துடன் இன்றைய தினம் நாடாளுமன்றத்துக்கு வருகை தரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித இடையூறும் விளைவிக்காமல் அவர்கள் வருகைதர சந்தர்ப்பம் அளிக்குமாறு, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன நேற்றைய தினம் இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
பலப்படுத்தப்படும் பாதுகாப்பு
இந்நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் இரண்டு பிரதான நுழைவு வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
மேலும், இலங்கை வரலாற்றில் நாடாளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படவுள்ள இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்..
ஏழு நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி! வெளியானது விசேட அறிவித்தல்
சற்று முன் பதில் ஜனாதிபதியாக ரணில் பதவிப்பிரமாணம்
புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றம் தெரிவு செய்யும் விதம்
கோட்டாபயவின் பதவி விலகல் தொடர்பில் வெளியானது அதி விசேட வர்த்தமானி

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 7 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
