சற்று முன் பதில் ஜனாதிபதியாக ரணில் பதவிப்பிரமாணம்
ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த விடயத்தை பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கோட்டாபய பதவி விலகல்
| ஏழு நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி! வெளியானது விசேட அறிவித்தல் |
கோட்டாபய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன இன்று காலை அறிவித்திருந்தார்.
ஜுலை 14ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உத்தியோகபூர்வமாக அவர் பதவி விலகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வரை ஜனாதிபதியின் அதிகாரங்கள், பொறுப்புக்கள் மற்றும் அரசியலமைப்பினால் பொறுப்பாக்கப்பட்டுள்ள விடயங்களை அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் செயற்படுத்துவார் எனவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Bigg Boss 10: நீயும், உன் கூட்டமும் முடிந்தால் என்னை அடிச்சி பாருங்கடா? டிடிஎஃப்-ஐ வைத்து மக்களை நேரடியாக தாக்கிய ஜேசன் Manithan
இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை மைனா நந்தினி... அவரே வெளியிட்ட கியூட் வீடியோ Cineulagam