ராஜபக்சகளின் குடியுரிமையை இரத்து செய்வது தொடர்பில் வெளியான தகவல் - செய்திகளின் தொகுப்பு (Video)
பொருளாதார குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச உள்ளிட்டோரின் குடியுரிமையை இரத்து செய்வதற்கு அமைச்சரவையின் அனுமதியும், நாடாளுமன்றின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் அவசியம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்திலோ, பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையிலோ அல்லது மோசடியில் ஈடுபடுவதற்காகவோ நிதியை பயன்படுத்தினால் அதற்கு நிறைவேற்று அதிகாரம் பொறுப்புக்கூற வேண்டும்.
அந்தவகையில் நீதிமன்ற தீர்ப்புக்கு நிறைவேற்று அதிகாரம் கட்டுப்பட வேண்டும். எனவே, பொருளதார நெருக்கடிக்கு காரணமானர்கள் குறித்து தேவையேற்படின் விசேட
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
