சட்டத்தை மதித்து மகிந்த ராஜபக்ச உடனடியாக பதவி விலகவேண்டும் - எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்து
பொருளாதாரக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உடன் துறக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்களின் நம்பிக்கையை மீறுவது மிக மோசமான விடயம். பொது மக்களின் நம்பிக்கையை மீறியவர்களின் பெயர்களை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
பதவி விலகல்
அவ்வாறு உயர்நீதிமன்றத்தால் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு இந்த சபையில் அமர்வதற்கு எந்த உரிமையும் இல்லை.
அவர்கள் பதவி விலகல் செய்திருக்க வேண்டும். உண்மையான ஜனநாயக நாடுகளில் தீர்ப்பு வெளியாகி, மறுநாளே பதவி விலகல் இடம்பெற்றிருக்கும்.
ராஜபக்சக்கள் அவ்வாறு செய்யவில்லை. எனவே, இப்போதாவது சட்டத்தை மதித்து, மகிந்த ராஜபக்ச பதவி விலகவேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |