பலமான முறைப்பாடு, அதனாலேயே சுசிலின் பதவி பறிப்பு: அமைச்சர் நாமல் தகவல் - செய்திகளின் தொகுப்பு(Videos)
இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த சுசில் பிரேமஜயந்தவின்(Susil Premajayantha) பதவியை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya)பறித்துள்ளார்.
இந்த நிலையில் அவரின் பதவி பறிப்பு தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) கருத்து தெரிவித்துள்ளார். சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக எழுந்துள்ள பல்வேறு ஒழுக்காற்று குற்றச்சாட்டுகள் காரணமாகவே அவர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமைச்சரவை, அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் பல ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை விமர்சித்ததற்காக அவருக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,