இன்று முதல் தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம்!
இன்று முதல் ஜூலை 6ஆம் திகதி வரை தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தை சுகாதார அமைச்சகம் ஆரம்பிக்கவுள்ளது.
இந்த வருடம், இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் சுமார் 27,932 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 16 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நுளம்பு கட்டுப்பாட்டு
இதன்படி, மேல் மாகாணத்திலேயே அதிகமானோர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கிழக்கு, சபரகமுவ மற்றும் தென்மாகாணங்களும் அதிக ஆபத்துள்ள மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நோயால் பல குழந்தைகள் மரணமானதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தநிலையில், டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவுவதை எதிர்த்துப் போராட, இன்று முதல் ஜூலை 6 வரை சுகாதார அமைச்சகம் தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தை ஆரம்பிக்கவுள்ளது.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
