டெங்கு நுளம்பு பரவும் அபாயம் உள்ள இடங்களுக்கு சிவப்பு அறிவித்தல்
ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரி பிரிவின்கீழ் உள்ள மாங்குளம் பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை ஒன்று நேற்றையதினம்(04) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரி பிரிவின்கீழ் உள்ள புதிய கொலணி மாங்குளம் பகுதியில் டெங்கு அடையாளம் காணப்பட்டதனையடுத்து குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டெங்கு நுளம்பு பரவும் அபாயம்
மாங்குளம் ஆதார வைத்தியசாலை வளாகம் மற்றும் மாங்குளம் புதிய கொலணி ,பழைய கொலணி பகுதியில் உள்ள வீட்டு வளாகங்களும் பரிசோதிக்கப்பட்டிருந்தது.
அப்போது டெங்கு நுளம்பு பரவும் அபாயம் உள்ள இடங்களை கொண்ட வளாகங்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டதுடன் சட்ட நடவடிக்கைக்கும் உட்படுத்தப்பட்டனர்.
வளாக உரிமையாளர்கள் பொது சுகாதார பரிசோதகர்களினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மாங்குளம் பொது சுகாதார பரிசோதகர் நதிருசன் தலைமையில் இடம்பெற்ற குறித்த சோதனை நடவடிக்கையில் முத்தையன்கட்டு பொது சுகாதார பரிசோதகர் லோஜிதன் மற்றும் ஒட்டுசுட்டான் பொது சுகாதார பரிசோதகர் டிலக்சன் ஆகியோரும் இணைந்து சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
