உச்சம் தொட்ட தங்க விலை
கடந்த சில நாட்களாக தங்க விலையில் வழமைக்கு மாறான மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில், இன்று(30.09.2025) அதன் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,165,906 ரூபாவாக காணப்படுகின்றது.
இலங்கையில் தங்க நிலவரம்
24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 41,130 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 329,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலையானது 37,710 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 301,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 35,990ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 287,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.
ஆசிய வர்த்தகத்தில் தங்கத்தின் விலை
ஆசிய வர்த்தகத்தில் தங்கத்தின் விலையானது இன்று(30) புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அமெரிக்க அரசாங்க முடக்கம் ஏற்படக்கூடும் என்ற அச்சம் மற்றும் அமெரிக்க வட்டி விகிதக் குறைப்புகளின் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகள் பாதுகாப்பான புகலிட உலோகத்திற்கான தேவையை அதிகரித்துள்ளன.
அதன்படி, ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 3,865.73 அமெரிக்க டொலர்கள் என்ற உச்சத்தை எட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



