வரலாறு காணாத விலை உயர்வை அடைந்த தங்கம்! அதிர்ச்சியளிக்கும் மாற்றம்
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை புதிய சாதனையைப் பதிவு செய்து, ஒரு அவுன்ஸுக்கு 3,235 அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது 2025இல் தங்கத்தின் மிக உயர்ந்த விலையாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
முதலீட்டாளர்களை தங்கத்தை நோக்கி..
புவிசார் அரசியல் பதற்றங்கள், குறிப்பாக அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக மோதல்கள் மற்றும் உலகளாவிய வர்த்தகக் கட்டுப்பாடுகள் முதலீட்டாளர்களை தங்கத்தை நோக்கி திருப்பியுள்ளன.
உலகப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட 10வீத சரிவு, அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி வீதக் குறைப்பு எதிர்பார்ப்புகள் மற்றும் டொலரின் மதிப்பு சரிவு ஆகியவையும் தங்கத்தின் தேவையை அதிகரித்துள்ளன.
மேலும், சீனா, இந்தியா உள்ளிட்ட மத்திய வங்கிகளின் தங்கக் கொள்முதல் 2024இல் 1,000 மெட்ரிக் தொன்களைத் தாண்டியதால், விலை உயர்வுக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது.
2026இல் 3,350 டொலர்களை எட்டும்
ஜனவரியில் 2,796 டொலர்களாக இருந்த தங்கத்தின் விலை, பெப்ரவரியில் 2,900 டொலர்களையும், மார்ச்சில் 3,128 டொலர்களையும் தாண்டியது.
ஏப்ரல் 12இல் 3,200 டொலர்களை உடைத்து, தற்போது 3,235 டொலர்களை எட்டியுள்ளது.
கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் 2025 இறுதிக்குள் தங்கம் 3,300 டொலர்களை எட்டும் எனவும், பேங்க் ஆஃப் அமெரிக்கா 2026இல் 3,350 டொலர்களை எட்டும் எனவும் கணித்துள்ளன.
இருப்பினும், புவிசார் பதற்றங்கள் குறைவடைந்தால் விலை சீராகலாம் எனவும் எச்சரித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்பிற்கு ஜனாதிபதியாக பணியாற்ற உடற்தகுதி இருக்கிறதா? வெளியான மருத்துவ பரிசோதனை அறிக்கை News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா Cineulagam

மைனா படத்தில் போலீஸ் ரோலில் நடித்த இந்த நடிகரை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
