நான்கு நாட்களில் 773 மில்லியன் ரூபா வருமானம்
புத்தாண்டு காலப்பகுதியில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 773 மில்லியன் ரூபாவை இலங்கை போக்குவரத்து சபை வருமானமாக ஈட்டியுள்ளது.
கடந்த 4 நாட்களில் இலங்கை போக்குவரத்து சபை கிட்டத்தட்ட 600 மில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
புத்தாண்டிற்காக சொந்த இடங்களுக்கு செல்ல இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளை மக்கள் பயன்படுத்தியதன் மூலம், நாளொன்றுக்கு சுமார் 200 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபை பொதுச் செயலாளர் ஆர்.டி. சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்து வருமானம்
இந்த பண்டிகை காலத்தில் பொது மக்களின் வசதிக்காக சுமார் 350 கூடுதல் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதேவேளை கடந்த 4 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 173 மில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய, கடந்த 4 நாட்களில் கிட்டத்தட்ட 500,000 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துள்ளதாகக் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று மட்டும் 19637 வாகனங்கள் கடந்து சென்றுள்ளது. இதன் மூலம் 39 மில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளியில் சாப்பிட நீ எதுக்கு இருக்க, மீனாவிடம் செந்தில் கேட்ட கேள்வி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam