நாடளாவிய ரீதியில் மதுபான சாலைகள் திறப்பு தொடர்பில் வெளியான தகவல்
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை வரை மூடப்பட்டுள்ளன.
இந்தக் காலப்பகுதியில் திறக்கப்படும் மதுபானசாலைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரித் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுற்றிவளைப்பு நடவடிக்கை
தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தினை தடுக்கும் வகையில் கடந்த 3 ஆம் திகதி முதல் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், நாட்டில் நேற்று வரை 1,320 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரியவந்த அதிர்ச்சி விஷயம்.. முதல் மனைவி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னல் Cineulagam
