ஓரங்கட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் திடீர் சந்திப்பு
மக்களின் கடும் எதிர்ப்பினால் அரசியல் மட்டத்தில் தற்காலிக ஓய்வினை பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதிகளான ராஜபக்சர்கள் நேற்றையதினம் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவை சந்திப்பதற்காக சென்றுள்ளார்.
இந்த சந்திப்பு விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்றதாக மகிந்தவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
மகிந்த - கோட்டாபய சந்திப்பு
அதில், “எனது சகோதரர், முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி அயோமா ராஜபக்ச ஆகியோர் எனது உத்தியோகபூர்வ இல்லத்தில் என்னைச் சந்திக்க வந்தனர், நாங்கள் மிகவும் அன்பான உரையாடலை மேற்கொண்டோம்.
புத்தாண்டு தினத்தன்று அவர்கள் கைகளில் வெற்றிலையுடன் வருவதைப் பார்த்தபோது, பக்மாவில் உறவினர்களை பார்க்க செல்லும் சம்பிரதாயமே எனக்கு நினைவுக்கு வந்தது. அவர்கள் இருவருக்கும் வளமான மற்றும் ஆரோக்கியமான புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்வில் பல நண்பர்களும் கலந்து கொண்டனர், அவர்களுக்கு வளமான மற்றும் ஆரோக்கியமான புத்தாண்டு வாழ்த்துக்கள்” என அவர் பதிவிட்டுள்ளார்.




சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri
