புதிய அவதாரம் எடுக்கும் ரணில்! சூடுபிடிக்கும் சுரேஸ் சலே - பிள்ளையான் விவகாரம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பல விடயங்கள் நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த தாக்குதல் சம்பவங்களோடு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில் ஆகியோர் பேசு பொருளாக மாறி இருக்கின்றார்கள்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையானை சந்திப்பதற்கு குறித்த இருவரும் அனுமதி கோரிய நிலையில் அவரது சட்டத்தரணியை தவிர வேறு எவருக்கும் அனுமதி இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் உதயகம்மன்பில் அவரது சட்டத்தரணியாக இணைந்து கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளதோடு ரணிலுககு தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ள பின்னணியில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன்போது இருவரும் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ள நிலையில், அங்கு பேசப்பட்ட விடயங்கள் குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய அறிக்கையை வெளியிடவுள்ள கட்டாயத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா Cineulagam

சிறிய தீவில் 2 சடலங்களும் 39 புலம்பெயர் மக்களும்... கண்டுபிடித்த கிரேக்க கடலோர காவல்படை News Lankasri
