தொடர்ந்து உயரும் இலங்கை ரூபாவின் பெறுமதி
இந்த வாரம் முழுவதும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் உயர்வடைந்துள்ளது.
நேற்றையதினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291.40 ரூபாவாக காணப்பட்ட நிலையில், இன்றைய தினம் (28) 291.19 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
அதன்படி அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி நேற்று 299.98 ரூபாவாக காணப்பட்டதோடு, இன்று 299.73 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி
இதேவேளை ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 364.96 ரூபாவாகவும், கொள்முதல் பெறுமதி 378.81 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300.58 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 313 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200.21 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 208.71 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179.10 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 188.30 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
வர்த்தக வங்கிகளில் நிலவரம்
இந்நிலையில், நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (28) வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்ந்துள்ளது.
NDB வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 291.75 இலிருந்து ரூ.291.50 ஆகவும் விற்பனை விலை ரூ.299.75 இருந்து ரூ.299.50 ஆகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ.290.32 லிருந்து ரூ.290.02 ஆகவும் ரூ.300.73 லிருந்து ரூ.300.43 முறையே பதிவாகி இருப்பதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதிரூ.290.39 லிருந்து ரூ.289.89 வரையிலும் விற்பனை பெறுமதி ரூ.299 லிருந்து ரூ.298.50 என்றவாறாகக் காணப்படுகிறது.

குற்றவியல் நீதி தொடர்பில் வாய் திறக்காத வெளிவிவகார அமைச்சர் - சபையில் கஜேந்திரகுமார் எம்.பி. குற்றச்சாட்டு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |