இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்த பாகிஸ்தான்
2026, 20க்கு 20 உலகக் கிண்ண ஆயத்த நிகழ்வாக கருதப்படும் ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிகள், இந்த ஆண்டு செப்டம்பரில் நடத்தப்படவுள்ளன.
இந்த போட்டிகளை நடத்தும் உரிமையை இந்தியா கொண்டிருக்கின்ற போதும், அதனை இந்தியாவில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாற்றாக, நடுநிலையான நாடு ஒன்றில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
செம்பியன்ஸ் கிண்ண போட்டி
குறிப்பாக இந்த போட்டிகள், ஐக்கிய அரபு இராட்சியம் அல்லது இலங்கையில் நடத்தப்படும் என்று ஆசிய கிரிக்கட் சபை தரப்பு தெரிவித்துள்ளது.
தற்போது நடைபெறும் செம்பியன்ஸ் கிண்ண போட்டிகளுக்காக, பாகிஸ்தானுக்கு செல்வதை இந்தியா தவிர்த்துக்கொண்டது.
எனவே ஆசிய கிண்ணப்போட்டிகள் இந்தியாவில் நடத்தப்பட்டால், அதில் பங்கேற்க, பாக்கிஸ்தான் இந்தியாவுக்கு செல்லாது என்பதை மையப்படுத்தியே, போட்டிகள் இந்தியாவில் நடத்தப்பட வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |