கணேமுல்ல சஞ்சீவ படுகொலை விவகாரம்! முதல் நாள் செவ்வந்தி வாங்கிய சிம் அட்டை
பொலிஸாரால் தற்போது தேடப்பட்டு வரும் கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலையுடன் தொடர்புடைய செவ்வந்தி என்ற பெண் தனது பெயரில் சிம் அட்டை ஒன்றை கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
கடந்த 19ஆம் திகதி புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் வைத்து துப்பாக்கிச் சூடு நடைபெறுவதற்கு முதல் நாள் இந்த சிம் அட்டை கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
கடுவெல - வெலிவிட்ட பகுதியில் உள்ள ஒரு விற்பனை நிலையத்தில் இருந்து இந்த சிம் அட்டை கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேடப்படும் செவ்வந்தி
கடந்த 19ஆம் திகதி வழக்கு விசாரணைக்காக புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பாதாள உலகக் குழுவின் தலைவரான கணேமுல்ல சஞ்சீவவை, சட்டத்தரணி வேடத்தில் வந்த துப்பாக்கிதாரி ஒருவர் நீதிமன்ற கூண்டிற்குள் வைத்து சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார்.
குறித்த துப்பாகிதாரியும், அவருக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் செவ்வந்தி என்ற பெண்ணும், துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதற்கு முன்னர் வெலிவிட்ட பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்துள்ளனர்.
குறித்த காலப்பகுதியிலேயே செவ்வந்தி என்ற பெண்ணின் பெயரில் சிம் அட்டை ஒன்று கொள்வனவு செய்யப்பட்டதாக தெரியவருகின்றது.
மேலும், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்த சிம் அட்டை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
திகதி துப்பாக்கிச் சூடு நடைபெறுவதற்கு முன்னர் கணேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பின்னர் தற்போது காணாமல் போன பெண், துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன்னர் கடுவெல வெலிவிட்ட பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து சிம் கார்டு வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
19 ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முந்தைய நாள், அந்தப் பெண்ணும் துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் வெலிவிட்ட பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர்.
கடையில் இருந்தபோது அங்கு வந்த பெண் தனது பெயரில் இந்த சிம் அட்டை கொள்வனவு செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸ் தரப்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பொலிஸாரால் கைது செய்யப்பட்ட துப்பாகிதாரியை இன்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக சில செய்திகள் வெளிவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்து கடுமையாக பாதிக்கப்பட்டேன், என் கணவருடன் அதை வெளியிட்டால்.. பிரியாமணி எமோஷ்னல் பேட்டி Cineulagam
