கொழும்பில் விசேட பாதுகாப்பை உறுதிப்படுத்த தயாராகும் பொலிஸார்
இந்த வார இறுதியில் ஆரம்பமாகும் பாடசாலை கிரிக்கெட் பிக் மேட்ச் என்ற மாபெரும் போட்டிகளின் நிமித்தம், பொலிஸ் சிறப்பு பாதுகாப்பு பொறிமுறையை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக சுமார் 1,000 பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அறியப்படுகிறது.
நடைபெற உள்ள பிக் மேட்ச் போட்டிகள்
கொழும்பில் உள்ள பல முன்னணி விளையாட்டு வளாகங்கள் மற்றும் கிரிக்கெட் மைதானங்களில், எதிர்வரும் வரும் மாதத்தில் 30 முன்னணி ஆண்கள் பாடசாலைகளின் 15க்கும் மேற்பட்ட பிக் மேட்ச் போட்டிகள் நடைபெற உள்ளன.
இதன்போது, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட பார்வையாளர்களின் பாதுகாப்புக்காகவும், சட்டவிரோத போதைப்பொருட்களைத் தடுக்கவும், அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அத்துடன் , குற்றவாளிகளைக் கைது செய்ய கணிசமான எண்ணிக்கையிலான பொலிஸார் சாதாரண உடையில் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணம் செய்து கடுமையாக பாதிக்கப்பட்டேன், என் கணவருடன் அதை வெளியிட்டால்.. பிரியாமணி எமோஷ்னல் பேட்டி Cineulagam
