புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை மேற்கொண்டுள்ள நடவடிக்கை
புதிய சட்டங்களை கொண்டு வரும் நோக்கில் பரஸ்பர அங்கீகாரப் பதிவு மற்றும் வெளிநாட்டு தீர்ப்புகளை நடைமுறையாக்குதல் தொடர்பான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
gசட்டமன்றம் பரஸ்பர அங்கீகாரம் பதிவு செய்தல் மற்றும் வெளிநாட்டு தீர்ப்புகளை நடைமுறையாக்கல், திருமணத்தை இரத்து செய்தல் அல்லது திருமணத்தில் இருத் தரப்பினரைப் பிரிப்பதற்காக வழங்கப்பட்ட வெளிநாட்டு தீர்ப்புகளை அங்கீகரித்தல் மற்றும் பதிவுச் செய்வதற்கான ஏற்பாட்டுடன் ஒரு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டமா அதிபரின் அனுமதி
இது போன்ற சட்டங்களை நடைமுறைப்படுத்த தற்போது சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்கத்தினால் கூறப்பட்டுள்ளது.இதன்படி சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் நாடாளுமன்றத்திற்கு ஒப்புதலை சமர்ப்பிப்பதற்கும் நீதித்துறை, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியல் அமைப்பை மறுசீரமைப்புச் செய்ய அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |