ரணிலுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்காதிருக்க தமிழ் தேசிய பொதுக் கூட்டமைப்பு தீர்மானம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்காதிருக்க தமிழ் தேசிய பொதுக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் சிவில் சமூக தலைவர்களுக்கும் நாளை (12) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்புக்கு ஜனாதிபதி செயலக பிரதிநிதிகளால் தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளைய சந்திப்பு
குறித்த சந்திப்பில், தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு என்ற அடிப்படையில் 14 உறுப்பினர்களும் கலந்து கொள்ள மாட்டார்கள் எனவும் தேர்தல் பணிகளில் மூழ்கி இருப்பதால், குறுகிய கால அழைப்பின் அடிப்படையில் நாளைய சந்திப்பில் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பாக கலந்து கொள்வது சிரமம் என தமிழ் தேசிய பொது கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.
அத்துடன், எதிர்காலத்தில் இது போன்ற அழைப்புகளை ஏற்று சந்திப்புகளில் கலந்து கொள்வது தொடர்பான முடிவை பொதுக் கட்டமைப்பு கூடி முடிவெடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் தமிழ் தேசிய பொது கூட்டமைப்பின் மூலம் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |