கடைசி நிமிடம் வரை சசிகலாவுக்கு நடந்த நெருக்கடி
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ் பாரிய நெருக்கடிகளுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், அவரை பின்தள்ளுவதற்கு பாரிய திட்டமிட்ட சதிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் மகளிர் அணி தலைவி விமலேஸ்வரி சிறிஸ்காந்தரூபன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் தெரிவில் ஏற்பட்ட குழப்பநிலைகள் மற்றும், கட்சியின் உள்ளக விவகாரங்கள் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும், ''எதிர்வரும் பொதுத் தேர்தலில் சசிகலா போட்டியிட்டு வெற்றியடைவார் என்ற நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் உள்ளது.
கடந்த தேர்தலில் அவர் ஏமாற்றப்பட்டது தொடக்கம் நான்காவது இடத்திற்கு தள்ளிவிடப்பட்டது என்பன தேர்தலில் நடந்த குளறுபடிகள் என்பது அனைவரும் அறிந்த விடயம்" என்றார்.
இவ்வாறு, இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து சசிகலா ரவிராஜ் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பிலும், புறக்கணிப்பின் பின்னணி தொடர்பிலும் முழுமையாக ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு…
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
