30 நாட்களுக்கு பின்னர் வீடு திரும்பிய தமிழக மீனவர்கள்
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழகத்தின் 23 மீனவர்களில் 18 பேர் தமிழகம் திரும்பினர்.
நாகப்பட்டிணம், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த இந்த18 பேரும் கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதியன்று இலங்கையின் கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர்
இதனையடுத்து அவர்கள் யாழ்ப்பாண நீதிமன்றத்தினால் காவலில் வைக்கப்பட்ட நிலையில் நவம்பர் 15 ஆம் திகதியன்று விடுவிக்கப்பட்டனர்
இந்தநிலையில் இந்த 18 பேரும் சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டனர்.
இதேவேளை 23பேரில் 5 பேர் கோவிட் தொற்று காரணமாக, இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விரைவில் தமிழகத்துக்கு அனுப்பப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
