தமிழ் நாட்டில் 234 தொகுதிகளில் தொடங்கிய வாக்குப்பதிவு! 4 மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்
தமிழ் நாட்டில், இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் உள்ள 290 ஆவது வாக்குச்சாவடியில் 969 வாக்காளர்கள் வாக்கினை செலுத்தாமல் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
4 மணி நேரமாகியும் வாக்களிக்காத மக்கள்
நெல்லை மாவட்டம் முழுவதும் 1,680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் 969 வாக்காளர்கள் வாக்கினை செலுத்தாமல் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் ஆரம்பமாகி 4 மணி நேரமாகியும் மக்கள் வாக்களிக்க செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளமையினால் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மார்ச் 2 ஆம் திகதி நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்தில் நீதி கிடைக்கவில்லை எனக்கூறி மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.