தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் தொடங்கியது வாக்குப்பதிவு! ஜனநாயக கடமையாற்றினார் தவெக தலைவர் விஜய்
புதிய இணைப்பு
சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட நீலாங்கரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது வாக்கினை பதிவு செய்தார்.
வாக்களித்துவிட்டு கை விரலில் வைக்கப்பட்ட மை-யை விஜய் காண்பித்தார். வாக்களித்துவிட்டு வெளியே வந்த விஜய் அங்கிருந்த முதியவர்களிடம் கலந்துரையாடினார்.

எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ஜனநாயக கடமையாற்றினார்.
வாக்களித்துவிட்டு கை விரலில் வைக்கப்பட்ட மை-யை எடப்பாடி பழனிசாமி புன்னகையுடன் காண்பித்தார். அவருடன் அவரது மனைவி, மகன் சென்று தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
மு.க.ஸ்டாலின்
சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி, மகன், மருமகள், பேரனுடன் வாக்களிக்க வந்தார்.

வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தனது வாக்கை மு.க.ஸ்டாலின் பதிவு செய்தார். இதையடுத்து அவரது மனை துர்கா ஸ்டாலின், பேரன், மருமகள், மகன் உதயநிதி ஸ்டாலின் அனைவரும் வாக்கை பதிவு செய்தனர்
முதலாம் இணைப்பு
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
பொதுமக்கள், தலைவர்கள் மற்றும் நட்சத்திரங்கள் வாக்களித்து வருகின்றனர்.
வாக்கு பதிவு
நடிகை குஷ்பூ, சுந்தர்.சி தங்களது மகளுடன் வரிசையில் நின்று வாக்கு செலுத்தினர்.
நீலாங்கரையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது மனைவியுடன் வாக்களித்துள்ளார்.

வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்குவதற்கு முன்னதாகவே சென்னை திருவான்மியூரில் உள்ள பாரதிதாசன் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற நடிகர் அஜித்குமார் காலை 6.55 மணிக்கு தனது வாக்கினை பதிவு செய்தார்.
இதன்மூலம் தமிழ்நாட்டில் முதல் நபராக நடிகர் அஜித்குமார் வாக்களித்துள்ளார்.
வாக்களித்துவிட்டு கை விரலில் வைக்கப்பட்ட மை-யை நடிகர் அஜித்குமார் காண்பித்தார்.
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam