தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
தமிழக சட்டமன்றத்தேர்தல் 2026 இன் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை பதிவாகியுள்ள வாக்குகள் ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் அதிரவைத்துள்ளன.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது.
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
ஜனநாயகப்புரட்சி
இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70 % வாக்குகள் பதிவாகியுள்ளமை மாபெரும் ஜனநாயகப் புரட்சியாகவே பார்க்கப்படுகின்றது.

கடந்த காலத்தேர்தல்களில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி பதிவான வாக்கு சதவீதத்தை தற்போதைய நிலவரத்துடன் ஒப்பிடும் போது பெரும் மாற்றத்தினை பதிவு செய்துள்ளது.
2016: 42.10% (2.45 கோடி வாக்குகள்)
2019 (நாடாளுமன்றம்): 39.49% (2.36 கோடி வாக்குகள்)
2021: 39.61% (2.48 கோடி வாக்குகள்)
2024 (நாடாளுமன்றம்): 39.51% (2.46 கோடி வாக்குகள்)
2026 (தற்போது): 56.81% (3.25 கோடி வாக்குகள்) கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இந்த முறை தங்களது வாக்குகளை முன்கூட்டியே செலுத்தியுள்ளனர்.
குறிப்பாக, வழக்கமாக மதிய நேரங்களில் மந்தமாக இருக்கும் வாக்குச்சாவடிகள், இன்று மக்கள் வெள்ளத்தால் நிரம்பியுள்ளன.
வாக்கு எழுச்சிக்கு முக்கியமான மூன்று காரணங்கள்
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத இந்த வாக்கு எழுச்சிக்கு முக்கியமான மூன்று காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

1. விஜய்யின் அரசியல் வருகை மற்றும் இளைஞர்களின் ஆர்வம் இந்தத் தேர்தலில் மிக முக்கியமான மாற்றாகப் பார்க்கப்படுகின்றது.
2. பணம் - இந்த அதீத வாக்குப்பதிவுக்கு "பணம் கொடுத்தல்" (Cash for Votes) ஒரு காரணமாக இருக்குமோ என்ற சந்தேகமும் வலுவாக எழுந்துள்ளது.
3. செயலற்ற வாக்காளர்களின் எழுச்சி (Inactive Voters) இதன்படி, மாலைக்குள் தமிழகத்தின் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 80%-ஐத் தாண்டும் என்றும் கூறப்படுகின்றது.
இந்த முறை 5 முனை போட்டியில் விஜய் போன்ற புதிய சக்திகள் உள்ளதால், தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் இறுதி நிலவரம் மற்றும் முடிவுகள் பல அதிரடித் திருப்பங்களைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri