விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் 11 மணி நேரம் நடைபெற்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்துள்ளது.
வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல்! 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி உறுதி - வாக்களித்த சற்றுநேரத்திலேயே அறிவித்த ஓ.பன்னீர்செல்வம்
வாக்களிக்க ஏற்பாடுகள்
ஆறு மணிக்குள் வாக்கு மையத்திற்குள் வரும் அனைவரும் வரிசையில் எவ்வளவு நேரம் காத்திருந்து வாக்களித்தாலும் இரவு எட்டு மணி, ஒன்பது மணி ஆனாலும் அதனை கடந்தும் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் கூறியுள்ளார்.

அதன்படி, மாலை 6 மணிக்குள் வாக்கு மையத்தின் வளாகத்திற்குள் வந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மாலை 6 மணிக்கு மேல் எவ்வளவு நேரம் ஆனாலும் (இரவு 8, 9 மணி அல்லது அதற்கு மேல்) வரிசையில் நிற்கும் அனைவரும் தங்களின் வாக்கை பதிவு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
எனவே, மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வரும் ஒவ்வொரு வாக்காளரும் கண்டிப்பாக வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam