பிள்ளையான் குழு மறைத்து வைத்துள்ள பயங்கர ஆயுதங்கள்: மற்றொரு சகா வெளியிடும் திடுக்கிடும் தகவல்கள்!

Sri Lanka Army Batticaloa Sri Lanka
By Independent Writer Sep 09, 2023 01:37 PM GMT

ரீ.எம்.வி.பி. என்று அழைக்கப்படுகின்ற 'பிள்ளையான் ஆயுதக் குழு' பெருமளவிலான ஆயுதங்களை மட்டக்களப்பில் மறைத்து வைத்துள்ளதாக அந்தக் குழுவில் அங்கம் வகித்த முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

IBC-தமிழின் சிறப்புச் செய்தியாளருக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் அதனைத் தெரிவித்திருந்தார்.

ஆயுதப் புதைப்பு

பிள்ளையான் குழுவின் பேச்சாளரும், நெருங்கிய சகாவுமான அசாத் மௌலானா CHANEL 4 சர்வதேச ஊடகத்திற்கு பிள்ளையான் பற்றிய பல இரகசியங்களை வழங்கியுள்ள நிலையில், பிள்ளையானின் மற்றொரு முக்கிய சகாவும், ரீ.எம்.வீ.பி. என்ற பிள்ளையான் குழுவின் முக்கியஸ்தருமான மற்றொரு உறுப்பினர் ஆயுதப் புதைப்பு தொடர்பான இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கருணாவின் பின் பிள்ளையான் அரங்கேற்றிய கொலைகள்!! மிகப் பெரும் ஆதாரங்கள் சிக்கின

கருணாவின் பின் பிள்ளையான் அரங்கேற்றிய கொலைகள்!! மிகப் பெரும் ஆதாரங்கள் சிக்கின

கல்குடா பேத்தாளை எல்லையிலுள்ள ஒரு தென்னந்தோப்பு, களுவாஞ்சிகுடி கடற்கரையில் உள்ள மதுபானச்சாலை வளாகம், நாவலடியிலுள்ள கறுவாத் தோட்டம் போன்றனவற்றில் பெருமளவிலான ஆயுதங்களை பிள்ளையான் குழு புதைத்து வைத்ததாக அவர் சாட்சி பகர்கின்றார்.

2009.03.07 அன்று ரீ.எம்.வி.பி. என்ற 'பிள்ளையான் ஆயுதக் குழு' தங்கள் வசமிருந்த ஏராளமான ஆயுதங்களை இலங்கை இராணுவத்தினரிடம் பகிரங்கமாகக் கையளித்திருந்தது.

பிள்ளையான் குழு மறைத்து வைத்துள்ள பயங்கர ஆயுதங்கள்: மற்றொரு சகா வெளியிடும் திடுக்கிடும் தகவல்கள்! | Tmp Dompt Weapons

ஆயுதக் கையளிப்பு

மட்டக்களப்பு வெபர் அரங்கில் இடம்பெற்ற அந்த ஆயுதக் கையளிப்பு நிகழ்வில் நூறுக்கும் மேற்பட்ட இயந்திரத் துப்பாக்கிகள், றொக்கட் லோஞ்சர்கள், கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் என்று ஏராளமான ஆயுதங்களை அவர்கள் கையளித்திருந்தார்கள்.

பிரிகேடியர் பர்ணாண்டோ மற்றும் டி.ஜ.ஜி எடிஷன் குணதிலக்காவிடம் ஆயுதங்கள் கையளிக்கப் பட்டன.

தமது உறுப்பினர்கள் அரசியல் நீரோட்டத்தில் கலக்க இருப்பதாகவும், பலர் வெளிநாடுசென்று பணிபுரிய உள்ளதாகவும் அந்த அமைப்பின் பேச்சாளர் அசாத் மௌலானா அறிவித்திருந்தார்.

பிள்ளையான் குழு மறைத்து வைத்துள்ள பயங்கர ஆயுதங்கள்: மற்றொரு சகா வெளியிடும் திடுக்கிடும் தகவல்கள்! | Tmp Dompt Weapons

ஆனால், சிறிலங்கா அரசபடைகளிடம் ஒப்படைக்காமல் ஏராளமான ஆயுதங்களை பிள்ளையான் குழு இரகசியமாகப் புதைத்துவைத்துள்ளதாக, அந்த அமைப்பில் நீண்டகாலம் செயற்பட்ட அந்த முக்கியஸ்தர் எமது செய்தியாளரிடம் தெரிவித்திருந்தார்.

“..2009ம் ஆண்டு காலப்பகுதிகளில் பெரும் தொகையிலான ஆயுதங்களை நாங்கள்; ‘D’ செய்தோம். கல்குடா பேத்தாளை எல்லையிலுள்ள தென்னந்தோப்பிலும், களுவாஞ்சிக்குடி கடற்கரை ஓரமாக உள்ள தென்னந் தோப்பில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த ஒரு மதுபானக் கடையை அண்டிய தோப்பிலும், நாவலடியில் பிள்ளையான் குழு உறுப்பினர் ஒருவரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற கறுவாத்தோட்டத்திலும் ஏராளமான ஆயுதங்கள் ‘D’ செய்யப்பட்டதை நான் நேரில் பார்த்தேன். நானும் அதில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்தேன்..’ என்று அவர் தெரிவித்திருந்தார்.

EXCLUSIVE: இராணுவ அதிகாரி கைதால் அச்சமடைந்த பிள்ளையான்! ஓட்டுனர் கூறிய பல இரகசியங்கள்:- முன்னாள் சகா அதிரடி வாக்குமூலம் (Audio)

EXCLUSIVE: இராணுவ அதிகாரி கைதால் அச்சமடைந்த பிள்ளையான்! ஓட்டுனர் கூறிய பல இரகசியங்கள்:- முன்னாள் சகா அதிரடி வாக்குமூலம் (Audio)

‘D’ செய்வது என்றால் ‘Dump' செய்வது என்று பொருள். அதாவது புதைத்து வைப்பது.

புதைக்கப்பட்ட இடங்கள்

அதேபோன்று திருக்கோவிலில் பிரதேசத்தில் சீலன் என்பவருடைய காணியிலும், ருத்திரா மாஸ்டர் என்பவருடைய வயலிலும், ஜெயந்தன் என்ற உறுப்பினருடைய தோட்டத்திலும் ஒரு தொகுதி ஆயுதங்கள் புதைக்கப்பட்டதாக தான் கேள்விப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நபர்களுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக வைத்திய அத்தாட்சிப்பத்திரம் பெற்று, அவர்களை சட்டம் அணுகமுடியாதவாறு பாதுகாப்பு வலைப்பின்னலை உருவாக்கிவிட்டு, அவர்களது பாதுகாப்பில் ஆயுதங்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக அந்த உறுப்பினர் தெரிவித்தார்.

சதித்திட்டத்தின் மையப் புள்ளியாக சிறைச்சாலை! சனல் 4 காணொளியால் மற்றுமொரு சர்ச்சை (Video)

சதித்திட்டத்தின் மையப் புள்ளியாக சிறைச்சாலை! சனல் 4 காணொளியால் மற்றுமொரு சர்ச்சை (Video)

அத்தோடு பிள்ளையான் குழு மேற்கொண்ட பல்வேறு படுகொலைகள், ஆட்கடத்தல்கள் போன்றன பற்றிய விபரங்களையும் எமது ஊடகவியலாளரிடம் பகிர்ந்துள்ளார்.

பிள்ளையான் குழு மேற்கொண்ட கொலைகளுக்கு கட்டளையிட்ட, அவர்களைப் பாதுகாத்த சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சிலரது பெயர்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

(அவர் வெளியிட்ட தகவல்களை உறுதிப்படுத்தும் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. விரைவில் மற்றைய தகவல்கள் வெளியிடப்படும்)

கோட்டாபயவின் திரிபோலி கொலை குழுவால் நாங்களும் கொல்லப்படுவோமா.. சபையில் அச்சம் வெளியிட்ட சாணக்கியன்(Video)

கோட்டாபயவின் திரிபோலி கொலை குழுவால் நாங்களும் கொல்லப்படுவோமா.. சபையில் அச்சம் வெளியிட்ட சாணக்கியன்(Video)

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US