சதித்திட்டத்தின் மையப் புள்ளியாக சிறைச்சாலை! சனல் 4 காணொளியால் மற்றுமொரு சர்ச்சை (Video)
சிறைக்கூடம் என்பது உண்மையில் சந்தேக நபர்களை குற்றம் சாட்டப்பட்டவர்களை நல்வழிப்படுத்துகின்றவிடயமாக இருக்க வேண்டியதே மீண்டும் ஒரு குற்றச்செயலை செய்வதற்கான சதித்திட்டம் தீட்டுகின்ற ஒரு கேந்திர நிலையமாக அமையக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை செயலாளருமான ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று (08.09.2023) மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சனல்4 வெளியிட்டுள்ள விடயங்கள் குறித்து சர்வதேச விசாரணையொன்றை நடாத்தி உயிர்த்த ஞாயிறு படுகொலை மற்றும் அரசியல்,ஊடகவியலாளர்களின் படுகொலைகளுடன் தொடர்புடையவர்களுக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வரவேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை வலியுறுத்தியுள்ளது.
பிரபலியமாக பேசப்படுகின்றஹன்ஸின் முகமத் எனப்படுகின்ற அசாத் மௌலானா அவர்களுடைய கருத்தை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்வதை விட தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியகருத்துக்கள் எமது மத தலைவர்கள் கூறிய கருத்துக்கள் அதிலும் குறிப்பாக சிறுகாமினி எனப்படுகின்ற அருட்தந்தை அவர் குறிப்பிட்ட கருத்து ஒரு பக்கம்இருக்க நலின் பண்டார கூறிய கருத்து இருக்கின்றது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
