சீதா எளிய அம்மன் ஆலயத்திற்கு திருப்பதி ஆலய முக்கியஸ்தர்கள் வருகை (Photos)
இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா - சீதா எளிய சீதை அம்மன் ஆலயத்திற்கு இந்தியாவின் திருப்பதி வெங்கடாசலபதி ஆலய நிர்வாக சபையினர் சிறப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இன்றைய தினம் (25.06.2023) விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியா திருப்பதி வெங்கடாசலபதி ஆலய நிர்வாக சபையினரை, நுவெரலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் வரவேற்றுள்ளார். இதன்போது சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளன.
சிறப்பு பூஜைகள்
மேலும் திருப்பதி வெங்கடாசலபதி ஆலய நிர்வாக சபையினருக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டதுடன், பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணனுக்கு நினைவுச் சின்னமாக பஞ்சமூர்த்தி உருத்ராட்சை மாலை வழங்கப்பட்டுள்ளதுடன், திருப்பதி ஆலய பிரசாதங்களும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |











சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
