மேல் மாகாண முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
மேல் மாகாணத்தில் முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கு ஜூன் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மானிய விலையில் கட்டண மீட்டர்களை வழங்கும் திட்டத்தை அரசாங்கம் தயாரிக்க வேண்டும் என்றும் அதன் தலைவர் ரஹ்மான் பள்ளி தெரிவித்துள்ளார்.
"பயணிகள் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் கட்டண மீட்டர் இருக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.
முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீட்டர் இன்றியமையாத அங்கமாகும். எனவே சாரதிகளுக்கு மலிவு விலையில் மீட்டர்களை இறக்குமதி செய்வதற்கு ஏற்பாடு செய்யுமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம்.
மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கான பதிவு ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30க்கு முன் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அதன் பின்னர், பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு, பொலிஸாருடன் இணைந்து பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை எடுக்கும்.
இந்த நோக்கத்திற்காக, மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையானது சட்டப்பூர்வ அதிகாரங்களைப் பெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
