கிளிநொச்சியில் சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்பட்ட மரக்கடத்தல் முறியடிப்பு!
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை பகுதியில் சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்பட்ட மரக்கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.
வீதிச் சோதனையில் ஈடுபட்ட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் நடவடிக்கை
இதன்போது, புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப்ரக வாகனத்தில் சூட்சுமான முறையில் வாகனத்தின் அடிப்பகுதியில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட பெறுமதி மிக்க 32 பாலை மரக்குற்றிகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கப்ரக வாகனமும், அதன் சாரதியும் பொலிஸார் கைது செய்யவுள்ளனர்.
இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட மரக்குற்றிகள், கப்ரக வாகனம் மற்றும் சந்தேக நபரையும் நாளையதினம்(27) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri