அரச ஊடக நிறுவனங்களுக்கு பலத்த பாதுகாப்பு
கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமாவைத் தொடர்ந்து நாளைய தினம் நாட்டுக்கு அறிக்கையொன்றை வழங்குவதற்காக, போராட்டங்களில் ஈடுபட்ட சில குழுக்கள் நேரடி ஒளிபரப்பு கோரியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் ஐடிஎன் நிறுவனம் ஆகியவற்றில் நூற்றுக்கணக்கான இராணுவ மற்றும் விமானப்படை உறுப்பினர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ரூபவாஹினி மற்றும் ஐ.டி.என் இரண்டின் நிர்வாகமும் சில எதிர்ப்புக் குழுக்களால் அணுகப்பட்டதாகவும், அவர்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்க விரும்பும் அறிக்கைகளை நாளை நேரலையில் ஒளிபரப்புமாறு கோரியதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
போராட்டக்குழுக்களின் கோரிக்கைகள் மறுப்பு
இருப்பினும் இரு நிர்வாகங்களும், போராட்டக்குழுக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுத்துவிட்டன.
இதனையடுத்தே இந்த இரண்டு ஊடக நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நூற்றுக்கணக்கான துருப்புக்கள்
நிறுத்தப்பட்டுள்ளன.