சமூக செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு
திருகோணமலை - பெரியகுளம் பகுதியில் சட்டவிரோத விகாரை அமைப்பதற்கு எதிராக போராடிய ராஜூ என்ற சமூக செயற்பாட்டாளரை நேற்றையதினம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவரது வீடு தேடிச் சென்று விசாரணை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலையில் உள்ள சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது தொடர்ச்சியாக TIDஇனர் விசாரணை மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பாணை
இந்த நிலையில், சமூக செயற்பாட்டாளரான ராஜூவை அவரது வீடு மற்றும் வேலைத் தளங்களுக்கு தேடிச் சென்று இவ்வாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை செய்ததுடன், தங்களது அலுவலகத்திற்கு வருமாறும் அழைப்பாணை விடுத்துள்ளனர்.
இதேவேளை, அவரை மிரட்டும் வகையில் அதிகாரிகள் நடந்து கொண்டதாகவும், இது சமூக செயற்பாட்டாளர்கள் மீது அச்சுறுத்தலை விடுக்கும் செயற்பாடாக உள்ளது எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் திருகோணமலையில் தாக்கப்பட்டதை தொடர்ந்து, திருகோணமலை முன்னணி செயற்பாட்டாளர்களையும் TID தேடி வருவதாக கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
